Saturday 3 August 2013

intha paadam valankiya khan sir ku thanks
Inline image 1

Inline image 2


உங்களிடம் விண்டோஸ் 7 ஒரிஜினல் CD மற்றும் அதன் கீயுடம் இருந்தால் நீங்கள் தாரலமாக உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் விண்டோஸ் 7 ஐ இன்ஸ்டால் செய்யலாம்.
நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பைல்களை CD அல்லது USB Pen Drive ல் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.




நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் DVD டிரைவில் விண்டோஸ் 7 CD யை இணைத்துவிட்டு அதனை Restart செய்யுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகும்போது  லோகோ வரும் நேரத்தில் F12 கீயை கீபோர்டில் அழுத்துங்கள். உடனே உங்கள் Boot Menu ஓப்பன் ஆகும். அதில் DVD/CD OPTION  என்று எழுதப்பட்டதுபோல் வரும்  இடத்தை செலக்ட் செய்து எண்டரை அழுத்துங்கள் உடனே உங்கள் விண்டோஸ் 7 CD லோடாகும்.


குறிப்பு: இந்த Boot Menu ஆப்சனை ஓப்பன் செய்வதற்காக shortcut key  ஒவ்வொரு பிராண்ட் கம்ப்யூட்டருக்கும் வித்தியாசப்படும்.  அதனை சரியாக பார்த்து சரியான கீயை அழுத்தி Boot மெனுவை ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
அல்லது உங்கள் கம்ப்யூட்டர் தானாக விண்டோஸ் CD ஐ செசெக்ட் செய்து லோடாக ஆரம்பித்துவிட்டால் (press any key to continue or Enter to continue setup or INSTALL WINDOWS setup) உடனே எண்டரை அழுத்திவிடுங்கள்.

2011-10-09_110712.png
அடுத்ததாக வரும் இந்த ஆப்சனில் இங்கு காண்பதுபோல் செலெக்ட் செய்து Next ஐ அழுத்துங்கள்
 2011-10-09_111239.png
அடுத்து வரும் தட்டில் Install Now என்பதை அழுத்துங்கள்
2011-10-09_111503.png
அடுத்து வரும் தட்டில் I accept the License என்பதை டிக் செய்து Next ஐ அழுத்துங்கள்.
-------
அடுத்து வரும் தட்டில் இந்த Custom (advance) என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
2011-10-09_111804.png



அடுத்து வரும் இந்த தட்டில் Driver Options என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
(இதில் முதலாவதாக செலெக் ஆகி இருக்கும் Partition 1 என்பது உங்கள் விண்டோஸ் ஏற்கனவே இன்ஸ்டால் ஆன டிரைவ் ஆகும்)
(புதிய ஹார்டிஸ்கின் மூலம் நீங்கள் இன்ஸ்டால் செய்யும்பொழுது Partition 1 என்ற டிரைவ் மட்டுமே இருக்கும்)
2011-10-09_112704.png



நீங்கள் Driver Option ஐ கிளிக் செய்ததும் அடுத்து வரும் தட்டின் கீழே  படத்தில் காட்டியதுபோ ஆப்சன்கள் வந்திருக்கும்.

2011-10-09_113308.png
இதில் நீங்கள் மேலே குறிப்பிட்ட Partition 1 என்ற இன்ஸ்டால் செய்த டிரைவை செலெக்ட் செய்துகொண்டு இங்கு உள்ள Delete என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.  (பழைய விண்டோஸ் புரோகிராமை அழிப்பதற்கு )

அடுத்து New என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். ( புதிய பார்டிசனை உருவாக்குவதற்கு)

அடுத்து Apply என்ற பட்டனை அழுத்துங்கள். ( பார்டிசன் வேலை முழுமை அடைவதற்கு )

------------------------------------------

(இரண்டு பார்டிசன் உருவாக்க வேண்டுமென்றால் இந்த சிவப்பு கலர் குறிப்பை படித்து பார்க்கவும். ஒரே பார்டிசனில் விண்டோஸ் ஐ இன்ஸ்டால் செய்தாலோ அல்லது ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் பார்டிசன் உருவாக்கப்பட்டிருந்தாலோ இதனை பார்க்க தேவை இல்லை)

குறிப்பு: பழைய விண்டோஸ் இல்லாமல் புதிய ஹார்டிஸ்கில் விண்டோஸ் ஐ இண்ஸ்டால் செய்யும்பொழுது  C, D என இரண்டு பார்டிசன் ( Partition 1 & Partition 2 )  உருவாக்க வேண்டுமென்றால் New என்பதை கிளிக் செய்த உதன்
வரும் ஆப்சனில் அதன் GB அளவை பாதியாக குறைத்து டைப் செய்துகொள்ள வேண்டும் (for partition 1) அதன் பிறகு apply கொடுக்க வேண்டும்.

உடனே மீதம் உள்ள GB unpartition space என வந்திருக்கும். அடுத்து நீங்கள் அந்த unpartition space ஐ செலெக்ட் செய்து New என்பதை கிளிக் செய்து apply என்பதை கிளிக் செய்தால் அது ஒரு தனி பார்டிசன் (partition 2) ஆக மாறிவிடும்.

உதாரணத்திற்கு உங்கள் புதிய ஹார்டிஸ்கில் 500 GB கெபாசிடி இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். இந்த 500 GB ஐ நீங்கள் 200 GB ல்  விண்டோஸ் ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு 300 GB ஐ தனி டிரைவாக உருவாக்கி ஆடியோ வீடியோ மற்றும் சாப்ட்வேர்களை காப்பி செய்து வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால் இதனை Partition 1 & partition 2 என்ற இரண்டு பார்டிசனாக உருவாக்க வேண்டும். (இந்த Partition 1 என்பது விண்டொஸை முழுவதுமாக இன்ஸ்டால் செய்து முடித்த உடன் உங்கள் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து பார்க்கும்பொழுது அது C டிரைவாக மாறி இருக்கும். Partition 2 என்பது D டிரைவாக மாறி இருக்கும்.)
எனவே முழுவதுமாக 500 GB unpartion Space ஆக இருக்கும்பொழுது New என்பதை கிளிக் செய்த உடன் 512,000 MB எனவோ அல்லது கொஞ்சம் குறைவான என்னிக்கையிலோ அங்கு டிஸ்பிளே ஆவதை நீங்கள் காணலாம்.
இந்த 512,000 MB ல் நீங்கள் 200 GB ஐ C டிரைவாக மாற்ற வேண்டுமென்றால் இங்கு 512000 க்கு பதிலாக 200000 என டைப் செய்து apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து மீதம் உள்ள 312000 unpartition space ஐ செலெக்ட் செய்து அப்படியே apply செய்து D டிரைவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இனி முதல் Partition ஐ மறுபடியும் செலெக்ட் செய்துகொண்டு Format என்ற இடத்தை கிளிக் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் C டிரைவில் விண்டோஸ் இன்ஸ்டால் ஆக ஆரம்பித்துவிடும். 
 ----------------------------------------------------


அடுத்து Format என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். ( விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கு உங்கள் பார்டிசனை சுத்தம் செய்வதற்கு ) உடனே உங்கள் முந்தைய விண்டோஸ் அழிந்து பார்மெட் ஆகிவிடும்.

பிறகு Next என்ற பட்டனை அழுத்துங்கள்.
2011-10-09_113308.png
உடனே இதுபோல் உங்கள் விண்டோஸ் 7 லோடாக ஆரம்பிக்கும். முழுவது லோடாகி முடிந்த பிறகு உங்கள் லேப்டாப் தானாக Restart ஆகும்.
2011-10-09_114426.png
அது தானாக லோடாகும் வரை சிறிது நேரம் காத்திருங்கள்.
அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் Restart ஆகி அப்டேட் ஆகிவிடும்.
இறுதியாக உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேடு கொடுக்கும் பகுதி ஓப்பன் ஆகும்
இதில் உங்கள் பெயரை டைப் செய்து கீழே உள்ள Next ஐ அழுத்துங்கள்.
2011-10-09_114820.png 
அடுத்து இந்த தட்டில் பாஸ்வேர்டு திரும்பவும் பாஸ்வேர்டு கொடுத்து Hint ஏதாவது டைப் செய்து Next ஐ அழுத்துங்கள்.
2011-10-09_115000.png

அடுத்து வரும் தட்டில் உங்களிடம் உள்ள விண்டோஸ் 7 ஒரிஜினல் CD ன் சீரியல் நம்பரை டைப் செய்து Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து வரும் தட்டில் முதலாவதாக உள்ள Use Recomonded Setting என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தேதியை சரியாக செலெக்ட் செய்து Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து Home Network என்பதை தேர்ந்தெடுங்கள்.
உடனே உங்கள் விண்டோஸ் சிறிது நேரம் லோடாகும்
பிறகு விண்டோஸ் 7 லோகோவுடன் பாஸ்வேர்டு கொடுக்கும் பகுதி வந்துவிடும்
அதில் நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்லலாம்.
அவ்வளவுதான் நீங்கள் விண்டோஸ் 7 ஐ இனி பயன்படுத்தலாம்.
2011-10-09_115739.png

0 comments: