உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதாரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். அதனால்தான் உணவில் வாசனைப் பொருட்களை சேர்த்து சமைக்கத் தொடங்கினர் நம்முன்னோர்கள். இன்றைக்கு பெரும்பாலான பொருட்களின் மகத்துவம் தெரியாமலேயே அவற்றை உண்டு வருகிறோம் இதோ நிபுணர்களின் பட்டியலை படியுங்களேன். இனி விபரம் அறிந்து சமைத்து சாப்பிடுவீர்கள்.
சாம்பாரோ, ரசமோ பெருங்காயம் இன்றி சமையல் இல்லை. வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம் என்கின்றனர் நிபுணர்கள். சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள் உங்களின் சிக்கலை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
முறுக்கேற்றும் மிளகு
இஞ்சி, பூண்டு

இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாமாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஓமம், சாதிக்காய்
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
லவங்கம், ஏலக்காய்

ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் செக்ஸ் குறைபாடு நீங்குமாம். ஆனால் ஏலக்காயை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கடலை உருண்டை
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை தேவைக்கு ஏற்ப முறையாக சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய வாழ்க்கையில் தடையின்றி மதமேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
0 comments:
Post a Comment