Sunday 13 July 2014

400x400_IMAGE22742063
















காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…?

தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.

அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.

0 comments: