ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வில் ஸ்மித். ஐயம் லெஜண்ட், ஹேன்காக், இன்டிபெண்டன்ஸ் டே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவுக்கு சென்றிருந்தார். அங்கு கடற்கரையில் கருப்பு ஷாட்ஸ், பனியன் அணிந்தபடி காற்று வாங்கியபடி படுத்திருந்தார். வில் ஸ்மித்தை அடையாளம் கண்டுகொண்ட சுற்றுலா பயணிகள் சிலர், அவரிடம் வந்து எங்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தொல்லை தர ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் போட்டோ எடுத்துக்கொண்டார்.
அப்போது ஆர்வமிகுதியால், கடற்கரையின் சூரிய குளியலில் ஈடுபட்டு இருந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் ஓடிவந்து ஸ்மித்திடம் நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டனர். ஸ்மித்தும் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன்பிறகு, இந்த படத்தை அவரிடமே காண்பித்து நன்றாக வந்துள்ளதா என்றும் அப்பெண்மணிகள் கேட்டனர்.
இந்த படங்கள் ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கணவன், காதலன் போன்றோருடன் வந்திருந்த பெண்கள் ஆடையின்றி, சினிமா நடிகருடன் போட்டோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment