
காதலனை நம்பிஏமாந்து விபச்சார விடுதியில் விற்கப்படும் அப்பாவி பெண்ணைப் பற்றிய கதையுடன் உருவாகி வரும் புதிய படம் அந்தரங்கம். இந்த படத்தில் அப்பாவி பெண்ணாக கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி கமலிகா அறிமுகமாகிறார். கதைப்படி விபசார விடுதிக்கு செல்லும் ஒரு ஓவியர் கமலிகாவை ரூ.2 லட்சம் விலை கொடுத்து தன்னுடன் அழைத்து வந்து விடுகிறார். அவர் நிர்வான படங்களை வரையும் ஓவியர் என்று தெரியாமல் அவரிடம் மனதை பறிகொடுக்கிறார் கமலிகா. ஒரு கட்டத்தில் கமலிகாவை நிர்வாணமாக நிற்க வைத்து, அவர் மீது ஓவியம் வரைகிறார் அந்த ஓவியர். இந்த காட்சி சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. அரை நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகை கமலிகா அளித்துள்ள பேட்டியில், படத்தில் ஒரு சில விநாடிகள்தான் இந்த அந்தரங்க காட்சி இடம்பெறுகிறது. அரை நிர்வாணமாக நடித்ததற்காக நான் வெட்கப்படவில்லை. இந்த படத்தை பார்த்து எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் நிறைய வரும் என எதிர்பார்க்கிறேன், என்று கூறியிருக்கிறார். இவர் கொல்கத்தாவில் மாடலிங் செய்து வந்த கமலிகா, ஏற்கனவே 2 பெங்காலி படத்திலும், ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார். அந்தரங்கம் படத்தை இயக்குபவர் ஜே.வி.ருக்மாங்கதன். தயாரிப்பாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment