Tuesday 2 July 2013



Dhanush Excellent Performer

தனது முதல் படமான ராஞ்ஜனாவிலேயே பாலிவுட்டின் மனம் கவர்ந்த புதிய ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ்- சோனம் கபூர் ஜோடியாக நடித்த ராஞ்ஜனா கடந்த வெள்ளியன்று இந்தியா முழுவதும் வெளியானது.
எடுத்த எடுப்பிலேயே தனுஷை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துள்ளன வட இந்திய மீடியாக்கள். பாலிவுட்டுக்குக் கிடைத்த மிகச்சிறந்த புது ஹீரோ என்று அவரைப் பாராட்டியுள்ளன.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்குப் போய் வெற்றிக்கொடி நாட்டிய ஹீரோக்கள் இருவர்தான். ஒருவர் ரஜினி.. மற்றவர் கமல்ஹாஸன்.
கமல் ஹாஸன் சில படங்களுக்குப் பிறகு இந்தியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தான் நடிக்கும் தமிழ்ப் படங்களை நேரடியாக இந்தியில் வெளியிட்டு வருகிறார்.
ரஜினியோ ஒரு கட்டத்துக்குப் பிறகு நேரடி இந்திப் படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். இத்தனைக்கும் தமிழுக்கு இணையாக இந்தியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது.
இந்த இருவரைத் தவிர பாலிவுட்டுக்குப் போன நடிகர்கள்பெரும்பாலும் எடுபடவில்லை. சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி,நாகார்ஜுனா, வெங்கடேஷ் என எல்லோருமே இந்தியில் முயற்சி செய்து தோற்றவர்களே. மாதவன் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை.
ஆனால், ரஜினி - கமலுக்குப் பிறகு, எடுத்த எடுப்பிலேயே பாலிவுட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.
அவர் நடித்த ராஞ்ஜனா முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. இந்த வாரஇறுதிக்குள் ரூ 40 கோடியை வசூலித்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் கணித்துள்ளது.
இந்த வெற்றியின் விளைவு, அடுத்தடுத்து மூன்று பெரிய இயக்குநர்கள் தனுஷை வைத்து படம் பண்ண தயாராக உள்ளார்கள். ஆனால் தனுஷோ, இன்னும் ஒரு ஆண்டு அவர்களை காத்திருக்கச் சொல்கிறாராம்! 

0 comments: